புதுச்சேரி வரதராஜப் பெருமாள் தாயாருக்கு மீண்டும் தங்க முலாம் பூசிய கவசங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2012 11:08
புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில், தங்க முலாம் பூசிய கவசங்கள், பெருமாள் - தாயாருக்கு இன்று மீண்டும் சார்த்தப்படுகின்றன.கோவில் தனி அதிகாரி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, வரதராஜப் பெருமாள் கோவிலில், செப்புத் தகட்டில் தங்க முலாம் பூசப்பட்ட "பெருமாள் - தாயார் கவசங்கள், கடந்த 12ம் தேதி ஒரு நாள் மட்டும் சார்த்தப்பட்டு இருந்ததால், நிறைய பக்தர்களால் தரிசனம் செய்ய முடியவில்லை. எனவே, இன்று (17ம் தேதி), பெருமாள் - தாயாருக்கு, தங்க முலாம் பூசிய கவசங்கள் மீண்டும் சார்த்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.