பதிவு செய்த நாள்
17
ஆக
2012
11:08
ரமலான் நோன்பு காலத்தில் நாம் கற்றுக்கொண்டது பொறுமையும், பிறர் மீது அன்பு செலுத்துவதும் ஆகும். இதோ ஒரு சம்பவம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது இறுதிக்காலத்தின்போது தமது துணைவியார் ஆயிஷா அம்மையாரின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன தகவல் இது. ஒருமுறை கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண், நாயகம் அவர்களுக்கு ஆட்டுஇறைச்சியை அன்பளிப்பாக வழங்கினாள். அண்ணலாரும், அவர்களுடன் சென்ற பிஷ்ர்இப்னு அவர்களும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே, அண்ணலார் தனது கையை உயர்த்தி, ""இந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது, எனச்சொன்னார்கள். சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஷ்ர்இப்னு இறந்துவிட்டார்.அந்த பெண்ணை அழைத்த நாயகம்(ஸல்) அவர்கள், ""ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டார்கள்.அதற்கு அந்த பெண், ""நீர் இறைவனின் தூதர் என சொல்லி வருகிறீர். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உம்மை ஏதும் செய்யாது என்று நான் நம்பினேன். அதன் காரணமாக இதை உமக்குத் தந்தேன், என்றாள்.இதன் பிறகு நாயகத்தின் தோழர்கள், ""அந்த பெண்ணைக் கொன்றுவிடலாமா? எனக் கேட்டனர். அண்ணலார் மறுத்துவிட்டார்கள். இவ்வாறாக தனக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்ற பெண்ணுக்கும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார்கள்.நோன்பு காலத்தில் நாம் கற்ற பொறுமையை வாழ்நாளெல்லாம் வளர்ப்போம். பொறுமையின் பெருமையைப் போற்றுவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33