கொடைக்கானல், கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகின்றன. இங்கு ஒரு அடி முதல் 25 அடி சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் கிழக்கு மாவு மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஏராளமான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.