பாதூர் பிரித்திங்கரா தேவி கோவிலில் அமாவாசை மிளகாய் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2022 06:08
உளுந்தூர்பேட்டை: பாதூரில் ஸ்ரீபிரித்திங்கரா தேவி கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூரில் ஸ்ரீபிரித்திங்கரா தேவி கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம் நடந்தது. இன்று காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பொங்கல், நெய், தயிர் மிளகாய் வற்றல் சாற்றப்பட்டு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. பின்னர் புடவைகள் யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. அமாவாசையையொட்டி பிரத்தியங்கரா தேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.