பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜபேட்டை, வளர்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான நெசவாளர்கள், முருக பக்தர் கிருபானந்த வாரியாரின் நெறியை பின்பற்றி வருகின்றனர்.இந்த கிராமங்களில், வாரியார் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டு, அவரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கிருபானந்த வாரியாரின், 116ம் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதட்டூர்பேட்டை வாரியார் மடத்தில் அவரது சிலைக்கு, திரளான நெசவாளர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். அதே போல், அம்மையார்குப்பம், சாந்த மலை அடிவாரத்தில் உள்ள வாரியார் மடத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது.