Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பாத்துறை காட்டு மாரியம்மன் ... நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் துவக்கம் நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலை வைத்ததாக சர்ச்சை
எழுத்தின் அளவு:
சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலை வைத்ததாக சர்ச்சை

பதிவு செய்த நாள்

28 ஆக
2022
07:08

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலையில் மருந்து சாத்துப்படி செய்து வைத்துள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், ஜீர்ணோத்தாரண விதிப்படி சிலை நிறுவப்பட்டுள்ளதாக ஸ்தபதி விளக்கம் அளித்துள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018 ஆக., 29ல், முதல்கட்ட பாலாலயம் செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, 2019 ஜன., 23ல் நடந்தது. அப்போது, சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார சுவாமி சிலைகள், கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன.
ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் நடக்கும் திருப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. செப்., 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், மூலவரை தரிசிக்க செல்லும் பிரதான நுழைவாயிலின் (கிழக்கு ராஜகோபுரம்) வடக்கு பக்கத்தில், திண்ணை மேல் உள்ள சுவரில் சுப்ரமணியர் சிலை, கடந்த, 25ல் மீண்டும் நிறுவப்பட்டது. அதன் உயரம், 83 செ.மீ., அகலம், 34 செ.மீ., அச்சிலை கிரீட பகுதியில் இருந்த கீறலுக்கு மருந்து சாத்துப்படி செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்த பக்தர்கள், உடைந்த சிலைக்கு மருந்து சாத்துபடி செய்து வைத்துள்ளதாக சர்ச்சையை கிளப்பினர்.  ஆனால், கோவில் அர்ச்சகர்கள் சிலர், ‘சிலையில் கீறல் தான் இருந்தது; உடையவில்லை’ என்றனர்.
உடைந்த சிலை வைக்கப்பட்டுள்ளதா, சிலைகள் எடுக்கும்போது சேதம் அடைந்ததா என,  பக்தர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சேதமானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல ஸ்தபதி கவுதமன் கூறியதாவது: சிலைகளின் தன்மை குறித்து, ஜீர்ணோத்தாரண விதிப்படி இரு வகைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘மகாங்கம்’ விதியில் சுவாமி சிலையின் தலை, கழுத்து, உடம்பு, கை, கால் உடைந்திருந்தால் மாற்றப்பட வேண்டும். ‘பிரத்யாங்க’ விதிப்படி சிலையில் உள்ள கிரீடம், உடை, ஆபரணம், விரல் நகம், விரல் ஆகியவற்றில் கீறல் இருந்தால் அஷ்டபந்தன சீர்செய்து கொள்ளலாம் என, சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி சுப்ரமணியர் சிலை சரிசெய்து நிறுவப்பட்டுள்ளது. பழமையான சிலை என்பதால் மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் உதவி கமிஷனர் சரவணன் கூறியதாவது: இரண்டாம் கட்ட பாலாலயத்தின்போது, சிலைகள் எடுக்கும் முன் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஆவணமாக வைத்துள்ளோம். அப்போது சுப்ரமணியர் சிலையின் கிரீட பகுதியில் கீறல் இருந்தது கண்டறியப்பட்டது.  சிலைகள், உலோக திருமேனி மையத்தில் பாதுகாப்பாக தான் வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மண்டல ஸ்தபதி, அர்ச்சகரின் கருத்துப்படி, மீண்டும் சிலை நிறுவப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் இதுபோன்ற தகவல் பரப்பப்படுகிறது. இனி தவறான தகவல் பரப்புவோர் மீது போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து ... மேலும்
 
temple news
ஊட்டி; ஊட்டி ஆஞ்ஜநேயர் கோவிலில் 9 நாட்கள் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடந்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  காரைமேடு கிராமத்தில் ஓளிலாயம் 18 சித்தர்கள் பீடம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் ... மேலும்
 
temple news
 நத்தம்; நத்தம் பூசாரிபட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar