நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2022 07:08
திண்டுக்கல்: திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரை நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் 4 நாட்கள் நடக்கும் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம்,லெட்சுமி பூஜை,கோ பூஜை,நவக்கிரக பூஜைகளுடன் துவங்கியது. இன்று மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகபூஜை,பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. நாளை (ஆக.28) காலை 9:00 மணிக்கு 2ம் கால யாகபூஜை, மாலை 5:00 மணிக்கு 3ம் காலயாகபூஜை நடக்கிறது. ஆக.29ல் காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையுடன் காலை 9:15 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. விநாயகர் சதர்த்தியன்று பக்தர்களுக்கு வழங்க 50 ஆயிரம் லட்டுகள் தயாராகிறது.