பதிவு செய்த நாள்
31
ஆக
2022
10:08
கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று, மாலை சிறப்பாக நடந்தது. இதற்காக வளர்ப்பு யானை அலங்கரித்து வரிசையில் நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டும் அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து கோவிலை வளம் வந்து பூஜை செய்ததுடன், விநாயகரை வணங்கியது. பழங்குடியினர் பாரம்பரிய இசையை இசைத்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது. அதே போன்று, அபயாரணம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. விநாயகர் கோவிலில் வளர்ப்பு யானைகள் நடத்திய பூஜை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. விழாவில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, வனச்சரகர்கள், வன ஊழியர், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.