வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஹரித்ர விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2022 07:09
தஞ்சாவூர் : தஞ்சாவூர், பிள்ளையார் பட்டி ஹரித்ர விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு பதினாறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாற்றி மஹாதீபாரதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.