Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழவந்த அம்மன் கோயில் முளைக்கொட்டு ... சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ஆவணி திருவிழா கொடியேற்றம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2022
07:09

போடி: போடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கொட்டகுடி ஆற்றில் கரைக்கப்பட்டது.

போடி நகர், பி. தர்மத்துப்பட்டி, ரங்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பிரதிஷ்டை செய்த 80க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், சதுர்த்தி விழா போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கீழச்சொக்கநாதர் கோயில் அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் தண்டபாணி, போடி நகர தலைவர் சந்திரசேகர், நகர பொதுச் செயலாளர் மணிகண்டன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர பேச்சாளர் கோட்டைச்சாமி, ஆர்.எஸ்.எஸ்., போடி நகர தலைவர் பாலசுப்பிரமணி, இந்து முன்னணி போடி நகர் ஒன்றிய அமைப்பு செயலாளர் கணேஷ்குமார், நகரத்தலைவர் போதுமணி, பொதுச் செயலாளர் வினோத், மாவட்ட பேச்சாளர் அங்குவேல், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் பூங்கொடி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாகுழு ஒருங்கிணைப்பாளர்கள், இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலைகள் போடி பஸ் ஸ்டாண்டில் துவங்கி காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று வேட்டை கருப்பசாமி கோயில் அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் கரைக்கப்பட்டன. போடி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar