சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ஆவணி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2022 07:09
நாகர்கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் மார்கழி, சித்திரை, மாசி திருவிழாக்கள் சிவபெருமானுக்கும், ஆவணி திருவிழா விஷ்ணு பெருமானுக்கும் நடைபெறுகிறது சைவ– வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் சிவனும், பெருமாளும் அடுத்தடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிவன் அபிேஷக பிரியராகவும், பெருமாள் அலங்கார பிரியராகவும் காட்சி தருகின்றனர். இங்கு ஆவணி திருவிழா நேற்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பவனி நடைபெறுகிறது. பத்தாம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டமும், 11–ம் தேதி பத்தாம் நாள் விழாவில் தெப்பக்குளத்தில் ஆராட்டும் நடைபெறுகிறது.