பதிவு செய்த நாள்
05
செப்
2022
07:09
குன்னூர்: குன்னூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பிரம்மாண்டமான ஊர்வலமாக நடத்தப்பட்டது. இந்து முன்னணி சார்பில் குன்னூரில், 71 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
நேற்று சிம்ஸ்பார்க்கில் துவங்கிய ஊர்வலம், பெட் போர்டு, மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக லாஸ் நீர்வீழ்ச்சியில் கொண்டு சென்று கரைக்கப்பட்டன. நகராட்சி தூய்மை பணியாளர் கணேஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரம்மாண்ட யானை பொம்பை வாகனத்தில் செல்ல, சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும்இந்து முன்னணி நிர்வாகிகள் பாஷா நகர் வகைகள் பல்வேறு ஆன்மீக அமைப்பினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வாத்தியங்கள் இசை முழங்க ஓம் காளி ஜெய் காளி, பாரத் மாதா கி ஜே, மற்றும் கணபதி கோஷம் எழுப்பினர். ,இதில் பறவை காவடி ஊர்வலம், பாரத் மாதா வேடமடைந்த சிறுமி உட்பட வித்தியாசமான பலரும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிம்ஸ்பார்க் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது இதில் கல்வி மற்றும் ஆன்மீகம் முக்கியத்துவம் கொடுத்து பலரும் பேசினர்.