மிகுந்த சோகத்துடன் எதையோ பறி கொடுத்தவர் போல வந்தார் ஒரு பெரியவர். வழியில் அவரை சந்தித்த முல்லா ‘‘ஏன் என்ன நடந்தது’’ எனக் கேட்டார். எனக்கு குடும்பம் இருந்தும் வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை. எல்லாமே வெறுப்பாக உள்ளது. இப்போதும் கூட அதிக பணம் உள்ளது. ஆனால் மகிழ்ச்சி இல்லை என அவர் வைத்திருந்த பணப்பையை காட்டினார். அதனைப்பிடிங்கிக் கொண்டு ஒடத்தொடங்கினார் முல்லா. என்பணம், என்பணம் என்று அலறியவாறு அவரை தொடர்ந்தார். அவரால் வயோதிகம் காரணமாக பிடிக்க முடியவில்லை. அங்கே தெருவோரத்தில் அவரது பணப்பை கிடப்பதைக்கண்டார். மகிழ்ச்சியுடன் என் பணப்பை கிடைத்து விட்டது என நினைத்தவாறு பணத்தை எண்ணிப்பார்த்தார் அப்படியே இருந்தது. மறைந்திருந்த முல்லா அவர் அருகில் வந்து ‘‘இது தான் மகிழ்ச்சி அது ஒவ்வொருவரின் மனதினை பொறுத்து அமைகிறது’’ என்றார். குடும்பத்துடன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்தவாறே வீடு நோக்கி நடந்தார் பெரியவர்.