* ஒழுக்கம், பண்பாடு, நன்னடத்தை, நற்பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதே நாகரிகம். * தனக்காகவும், பிறருக்காகவும் செய்யும் பிரார்த்தனை ஒருநாளும் வீணாவதில்லை. * சொல்லும் சொற்களை தெளிவாகவும், நேரடியாகவும் சொல்லுங்கள். * நல்ல சிந்தனையை அதிகம் சிந்திப்பவர் எமக்கு விருப்பமானவர். * நற்கதியில் செல்வதற்கு எந்த நேரமும் இறைவனை நினையுங்கள். * எந்த செயலை செய்வதாயினும் இங்கிதத்துடன் நடந்து கொள்ளுங்கள். * வேறொன்றுமில்லை இங்கிதம் என்பது குறிப்பறிந்து செயல்படுவதே. – பொன்மொழிகள்