பட்டத்தரசி அம்மன் கோயிலில் தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2022 07:09
அவிநாசி: பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவிநாசி காந்திபுரம் சுகாதார ஊழியர் வீதியில் எழுந்தருளியுள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(வெள்ளி) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று மாலை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். மேலும், இன்று காலை கணபதி, நவசக்தி, சுகர்சனம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெறுகின்றது. மாலையில் காப்பு கட்டுதல், திரவிய பூஜை, திருமுறை பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்க விழா குழுவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், அல்லாளபுரம் உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பகுதியினர். திருப்பூர், அல்லாளபுரம் உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றினர்.