Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ... ரங்கநாத பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் ரங்கநாத பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஓணம் : ஓணம் ஓணம் பொன்ஓணம்! அத்தம் பத்தில் திருவோணம்
எழுத்தின் அளவு:
இன்று ஓணம் : ஓணம் ஓணம் பொன்ஓணம்! அத்தம் பத்தில் திருவோணம்

பதிவு செய்த நாள்

08 செப்
2022
08:09

வாமனர் பிறந்த நேரம்: காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி குழந்தை வரம் வேண்டினாள். இதற்காக மகாவிஷ்ணுவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டாள். அந்த பால் மட்டுமே அவளுக்கு உணவு. இதன் பயனாக அவளது வயிற்றில் கருவாக வளர்ந்தார் மகாவிஷ்ணு. ஆவணி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம், துவாதசி திதியன்று வாமன மூர்த்தியாக அவதரித்தார். அப்போது உச்சிவேளை மதியம் 12:00 மணி. வானில் இருந்த சூரியன் இந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு பிரகாசம் அடைந்தான். வாமன ஜெயந்தியான இந்நாளை விஜய துவாதசி என்றும் சொல்வர்.

கடவுள் பெயரில் பட்டா: கடவுளுக்கு சொந்தமான இந்த பிரபஞ்சத்தையே தனக்கு சொந்தமாக்க விரும்பினான் மகாபலி. அதற்காக நர்மதை நதிக்கரையில் யாகம் ஒன்றை நடத்தினான். அதை தடுக்க வாமன அவதாரம் எடுத்து வந்து மூன்றடி தானம் கேட்டார் மகாவிஷ்ணு. அவரின் திருவடி தலையில் பட்டதும் இடத்தை மட்டுமல்ல, தன்னையே காணிக்கையாக கொடுத்தான் மகாபலி. கடவுளான மகாவிஷ்ணுவுக்கே இந்த உலகத்தின் பட்டா சொந்தம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

யாகம் செய்த இடம்: நர்மதை நதிக்கரையில் மகாபலி சக்கரவர்த்தி விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தினான். அப்போது அவனிடம் தானம் பெற வாமன மூர்த்தி வந்தார். நர்மதை என்ற சொல்லுக்கு அமைதியும் ஆனந்தமும் அளிப்பது என்பது பொருள். மத்திய பிரதேசத்தில் பாயும் இந்த நதியின் கரையோர பழங்குடியினர் கங்கையை விட நர்மதையை புனிதமானதாக கருதுகின்றனர். இவர்கள் ரேவா என இந்நதியை அழைக்கின்றனர். ராமாயணம், மகாபாரதம், வாயு புராணம், கந்த புராணத்தில் கூட ரேவா இடம் பெற்றுள்ளது. சிவனின் உடலிலிருந்து பெருகிய வியர்வையே இந்நதியாகும். இதற்கு ஜடாசங்கரி என்றும் பெயருண்டு.

கிரி வலம் அல்ல... நதி வலம்:
கிரிவலம் தெரியும். நதிவலம் தெரியுமா...மத்திய பிரதேசத்தில் நர்மதை நதியை காலணி அணியாமல் 1300 கி.மீ., துாரம் நடந்தே பக்தர்கள் சுற்றுவர். இதை முதலில் துவக்கியவர் மார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான பரசுராமர், அனுமன், அஸ்வத்தாமன், விபீஷணன், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகியோர் இந்த நதியை சுற்றி வருவோரை காப்பதாக ஐதீகம். இதைச் சுற்ற 3 வருடம், 3 மாதம், 12 நாட்கள் ஆகும். துறவிகளும், நர்மதை நதிக்கரையிலுள்ள கிராம மக்களும் அதிகம் பங்கேற்பர். அதிகாலையில் நர்மதா என மூன்று முறை உச்சரிக்க விஷபயம் ஏற்படாது. மாசி வளர்பிறை சப்தமி திதியன்று நர்மதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஒன்றுக்குள் இரண்டு: மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். இதில் அவர் இரண்டு வடிவங்களில் தோன்றினார். இரண்டடி உயர வாமனராக வந்த அவர், மகாபலியிடம் தானம் பெற்ற போது திரிவிக்ரமனாக மாறி நின்றார். திரி என்றால் மூன்று. விக்ரமன் என்றால் அளவில்லாதவன். தன் கால்களால் உலகையே அளந்தார். மற்ற அவதாரங்களில் அசுரர்களை கொன்ற மகாவிஷ்ணு, இதில் மட்டும் அசுரனான மகாபலியை ஆட்கொண்டார். பாதாள உலகில் தங்கியிருக்கும் மகாபலி ஓணத்தன்று மலை நாட்டு மக்களை சந்திக்க வருவதாக ஐதீகம்.

பேரனுக்கு தாத்தாவின் பரிசு: நரசிம்ம அவதாரத்துக்கு காரணமானவன் பிரகலாதன். இவனது மகன் விரோசனன். விரோசனனின் மகன் மகாபலி. வீரனான இவன் விஸ்வஜித் யாகத்தை நடத்தியதன் பலனாக தங்கத்தேர், குதிரைகள், சிம்மக் கொடி, வில், அம்புகள் ஆகியவற்றை பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினான். இதைக் கண்டு மகிழ்ந்த தாத்தாவான பிரகலாதன் கவசம் ஒன்றையும், அசுர குலகுருவான சுக்ராச்சாரியார் சங்கு ஒன்றையும் மகாபலிக்கு பரிசாகக் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை : பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம் சிறப்பாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar