தேவகோட்டை: தேவகோட்டையில் 145 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது ரெங்கநாத பெருமாள் கோவில். நூற்றாண்டை கடந்த இக்கோவில் 54 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி செய்யப்பட்டு ரெங்கநாத பெருமாள், ரெங்கநாயகி, கோதாநாயகி கருடன், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர் உட்பட ஆழ்வார் சந்நிதிகள் முற்றிலும் புதுப்பித்து திருப்பணி செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நான்கு தினங்கள் நடைப்பெற்றது. இலத்தூர் வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார் தலைமையில் ஆறு கால பூஜைகள் பூர்ணாகுதி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சீனிவாச பட்டாச்சாரியர் ராஜகோபுர கும்பல்களுக்கும், பாலாஜி பட்டாச்சார்யார் சுவாமி சந்நிதி மூலஸ்தான கும்பத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ராமேஸ்வரம் கோவில் அறங்காவலர் ஜமீன்தார் சோமநாராயணன், திருப்பதி மற்றும் அனைத்து முக்கிய திவ்ய தேசங்களில் , இருந்து பட்டாச்சாரியார் உட்பட நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 55 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கண்டு தரிசனம் செய்தனர்.