சூலூர்: சூலூர் வட்டாரத்தில் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சூலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கேரளாவை சேர்ந்த மக்கள் பலர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை இன்று உற்சாகத்துடன் கொண்டாடினர். காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி, பெரிய பூக்கோலத்தை பக்தர்கள் போட்டிருந்தனர். கோவிலில் பண்டிகையை ஒட்டி, அதிகாலையில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பாரம்பரிய உடையணிந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் பூக்கோலம் போட்டு, மகாபலி சக்கரவர்த்தியின் திருவுருங்களுக்கு பூஜைகள் செய்தனர். பல்வேறு வகையான உணவு பாதார்த்தங்களை படைத்து வழிபாடுகள் செய்தனர்.