பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் முருகப்பெருமான் கிருத்திகை பூஜை நடந்தது.
பொள்ளாச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம், பொள்ளாச்சி மகா சபா, மகிளா விபாக், மகாசபா இளைஞர் அணி சார்பில், முருகப்பெருமான் கிருத்திகை பூஜை, வாசவி மஹாலில் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து சீர்தட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
காலை, 10:30 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. மதியம், 12:30 மணிக்கு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. மதியம் திருமண விருந்து அளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.