மானாமதுரை: மானாமதுரை அருகே எறும்புகுடி, வைரவன்பட்டி கிராமத்தில் உள்ள ராஜா தெய்வம்,பண்ணை பண்ணைகருப்பணசாமி,ராக்கச்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எறும்புகுடி,வைரவன்பட்டி கிராமத்தில் உள்ள ராஜாதெய்வம் பண்ணைக்கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்து முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாக சாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.நேற்று காலை மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கும்பங்களின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை எறும்புகுடி, வைரவன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.