பதிவு செய்த நாள்
09
செப்
2022
11:09
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் கனக துர்க்கை அம்மன், வீர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் , கும்பாபிஷேகம் நடந்தது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் பிரியா நகர் விரிவு மூன்றில் கனகதுர்க்கை அம்மன், வீர பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.சில மாதங்களாக, கோவிலில் நடந்து வந்த திருப்பணிகள் சமீபத்தில் முடிந்தன. தொடர்ந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின.நேற்று காலை 7:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை முடிந்து, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, தீபாராதனை நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றி, வன்னி மரத்து விநாயகர், நவக்கிரஹங்கள், ஷீரடி சாய்பாபா, துர்க்கை அம்மன் ஆகிய கடவுளர்களுக்கு, காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. சிவகுமார் குருக்கள் குழுவினர், கும்பாபிஷேகம் நடத்தினர். பின், அம்மன் மற்றும் பரிவார கடவுளர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பெரியார் நகர் விரிவு மூன்று மற்றும் நான்கு, எஸ்.எம்.எஸ்., நகர், ஜே.சி.நகர் பொதுமக்கள் செய்தனர்.