ஸ்ரீவில்லிபுத்தூர், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மிகவும் குறைந்த அளவிலே பக்தர்கள் வந்திருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து இருந்தது. கோயிலில் சுந்தரமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜ் செய்திருந்தனர்.