தேவகோட்டை: தேவகோட்டை அருகே கோட்டவயலில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமான பிரஹன்நாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் நீண்ட ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தன. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டி கோவிலையும் சீரமைப்பு செய்து புதுப்பித்து திருப்பணி செய்தனர். நேற்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அய்யாச்சாமி குருக்கள் தலைமையில் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து. நேற்று காலை நாகநாத சுவாமி மூலவர் உட்பட பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷனமும் அதனை தொடர்ந்து மகாபிஷேகமும் பூஜைகள் நடந்தன. சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் , ஜமீன்தார் சோமநாராயணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.