மேலப்பெருங்கரை கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2022 07:09
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரை கிராமத்தில் அருள் பாலிக்கும் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இக் கோயிலில் செப். 7 அன்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தியுடன், முதல் கால யாக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் காலையாக பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, அனைத்து சுவாமி விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதி வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.