மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆதி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2022 12:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஆதி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் ஆதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்மை காரணமாக கோவில் சிதிலமடைந்தது. இதையடுத்து கிராம மக்களின் பங்களிப்போடு கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் இன்று (12ம் தேதி) நடைபெற்றது. கடந்த 9-ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று 6ம் கால யாக சாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடன் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை சுற்றி வந்து விமான அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.