Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்னம்பட்டியில் கோயில் ... பொன்பத்தி பாஞ்சாலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் பொன்பத்தி பாஞ்சாலியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகிலேயே உயரமான ஆனந்த நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை : அபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
உலகிலேயே உயரமான ஆனந்த நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை : அபிஷேகம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

13 செப்
2022
08:09

தஞ்சாவூர்: கும்பகோணம் உலகிலேயே உயரமான 23 அடி உயர ஐம்பொன்னால் ஆன, ஆனந்த நடராஜர் சிலை முழுமை பெற்றநிலையில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துக்கொண்டு பாலாபிஷேகம் செய்து வழிபட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திம்மக்குடி கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலையை உரிமையாளர் வரதராஜன். இவர் இந்திய அரசின்  ஒப்புதலோடு, கடந்த 2003-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்துக்கு,  சோழர் காலத்து சிற்ப சிலைகளைப் போல் 11 அடி உயரம் கொண்ட நடராஜ சிலையை வடிவமைத்து வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து, 1000 ஆண்டுகளுக்கு முன்பட்ட கோனேரிராஜபுரம் நடராஜர் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் போன்ற மிகவும் பழமையான முயலவன் மீது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலையை வடிவமைக்க முடிவு செய்தார்.

உலகத்தில் மிகப்பெரிய அளவிலான 23 அடி உயரத்தில் நடராஜர் சிலை உருவாக்கி, அதிலுள்ள திருவாச்சில் பூதகணங்கள், சிம்மம், பாம்பு போன்ற சிற்பங்களும் அதன் மேல் சிவ அச்சரங்கள், தீச்சுடர்கள் கொண்டு அமைக்கப்பட்டு கலை நயத்துடன் பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.  இதுக்காக கடந்த 2010-ம் ஆண்டு   23 அடி நடராஜருக்கு, ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஊற்றி பணியினை தொடங்கினார்.   பின்னர், போதிய நிதி இல்லாததால், பணி நின்றது. பிறகு 2012-ம் ஆண்டு வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு பணிகள் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்தது.  இதன் பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உலகிலேயே உயரமான ஆனந்த தாண்டவ நடராஜரான இச்சிலைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசைசெளந்தரராஜன், வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷ்பாபு ஆகியோர், பாலாபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார்,  தொடர்ந்து, பன்னிரு திருமுறையை ஓதுவார்கள் பதிகங்களை பாடியும்,   சிவ பூதகணநாதர் கைலை வாத்தியங்கள் முழங்க, அச்சிலைக்கு  பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால்  அபிஷேகம் நடைபெற்று, 23 அடிக்கு வெற்றி வேர்  மற்றும் தாமரை மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ்  உரிமையாளர் சகோரதர்களான வரதராஜன், சீனிவாசன், மயூர் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்துக்கொண்டனர்.  இது குறித்து சிலை வடிவமைத்த வரதராஜன் கூறியதாவது; உலகிலேயே மிகவும் உயர கொண்ட  23 அடி உயரமும் 17 அடி அகலமும் சுமார் 15 டன் எடையில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையாக  10 ஆண்டுகள் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.  இச்சிலையில் 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும், 56 பூதகணங்களையும்,102 தாமரை மலர்களையும்,2 மகர பறவைகளையும், 34 நாகங்களின் உருவங்களையும், காலில் முயலகன் கொண்டு  அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை சுமார் 4 கோடி ரூபாயில் சிலையை, தெலுங்கானா மாநில கர்வனர் தமிழிசை செளந்தரராஜன், வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷ்பாபுவிடம், சிலையினை ஒப்படைத்தார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது; நடராஜரால் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. சிதம்பரத்தில் நடராஜர் மத்திய புள்ளியில் இயங்கி கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். பெண்கள் 10 மாதம் சுமந்தால், ஒரு குழந்தை, இவர்கள்10 வருடம் ஒரு குழந்தையை  வடிவமைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன், எல்லோருக்கும் அருளையும் வழங்கி, கொரோனாவை, வெற்றிக்கொண்டு, தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றார். கொரோனாவுக்காக தடுப்பூசிகள், கண்டுபிடித்து, வெற்றி கொண்டுள்ளோம் என்றால், இறைவன் அருளால் தான் முடிந்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar