கீழக்கரை: கீழக்கரை அருகே முள்ளுவாடியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மூலப்பொருள் முத்து விநாயகர், திருத்தணி வேலவன், சந்தியடி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த செப்., 11 அன்று அனுக்ஞை பூஜையுடன் முதல் காலயாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை சூரிய பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு காலை 9 மணி அளவில் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றிய குழு துணை சேர்மன் சிவலிங்கம், உறவின்முறை தலைவர் நாகேந்திரன், செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முள்ளுவாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.