பதிவு செய்த நாள்
13
செப்
2022
11:09
செந்துறை, நத்தம் சேத்தூர் செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி செப்.11 கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூர்ணாகுதி, தீபாகரனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், வேதஜபபாராயணம், மருந்து சாற்றுதல், நவரத்தின பஞ்சலோக எந்திர பிரதிஷ்டை, பூர்ணாவதி தீபாரனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று சதுர்த்வார பூஜை, வேதிகா அர்ச்சனை, நாடி சந்தானம், மூல மந்திர மாலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து. மேளதாளம் முழங்க கடன் புறப்பாடு நடந்தது. முதலில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து செல்வ முத்து மாரியம்மன் கோவிலிலும் கருட தரிசனத்துடன் கும்பங்களின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., , நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம், ப.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.