விழுப்புரம்: விழுப்புரம் வைரமுத்து மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனி வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காலை கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 12ம் தேதி பகல் 12 மணிக்கு தீமிதி விழாவும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு கும்பம் கொட்டுதல், அம்மன் வீதியுலாவும் நடந்தது.தொடர்ந்து எட்டாம் நாள் திருவிழாவாக நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.