திருவெண்ணெய்நல்லூர், ஆக.21-திருவெண்ணெய்நல்லூர் அருகே யோகிராம் பாபாஜி சித்தர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க நிர்வாண சாமியார் அப்பகுதி மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். முக்தியடைந்த அவருக்கு யோகி சுரேஷ் நரேந்தர் சுவாமியின் முயற்சியால் கோவில் கட்டப்பட்டது. அங்குள்ள நிர்வாண சாமியாரை "யோகிராம் பாபாஜி சித்தர் என பெயரிட்டு அழைக்கின்றனர்.பணிகள் முடிந்து கடந்த 19ம் தேதி மாலை 5 மணிக்கு விக்னேஸ்வரபூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு 8 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், மறுநாள் 20ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.15 மணிக்கு விமானத்திற்கும், 10.25 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை யோகி சுரேஷ் நரேந்தர் சுவாமிகளின் பக்தர்கள் செய்திருந்தனர்.