பதிவு செய்த நாள்
18
செப்
2022
11:09
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி ரோடு, படவேட்டம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி ரோடு, புது வசந்தம் நகர், திரவுபதியம்மன், சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆக., 1ல் விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48 வது நாளான நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு யாகபூஜையும், 12:00 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை படவேட்டம்மன், ஆகாய கன்னியம்மன், கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் வேகவதி நதி ரோடு, சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு பொது மக்கள் செய்திருந்தனர்.