திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் மூலவர் மீது சூரியக்கதிர்கள் : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 08:09
திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை மாலையில் அஸ்தமிக்கும் சூரியக்கதிர்கள் ஸ்ரீகோவில் கருவறையில் பட்டு பகவானின் திருமேனியில் விழும் அதிசயம் நடக்கும். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத துவக்கத்தில் மாலை சூரியனின் ஒளிக் கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பா லிக்கும் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைக்கும் போதே முன்னேற்பாடுடன் அமைத்து உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சூரியனின் கதிர்கள் கருவறையில் பகவானின் திருமேனியில் விழுந்தது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.