ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம்; செப். 27 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 08:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரமோற்ஸவம் செப்டம்பர் 27 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு செப்.27 அன்று காலை 10:30 மணிக்குமேல் 11:30 மணிக்குள் வடபத்ரசயனர் சன்னதியில் கொடியேற்ற வைபவம் நடக்கிறது. இதனையடுத்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை 10:00 மணிக்கு வடபத்ரசயனர் மண்டபம் எழுந்தருளும், இரவு 8:00 மணிக்கு வீதி புறப்பாடும் நடக்கிறது. அக். 3 அன்று சயனசேவை, அக்.5 அன்று காலை 7:25 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. அக். 10 அன்று பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது. ஆண்டாள் கோயிலில் செப்டம்பர் 26 முதல் நவராத்திரி கொலு உற்சவம் துவங்கி, 9 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6:30 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தருளி கொலு வீற்றிருக்கிறார். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.