Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மகாளய‌ அமாவாசை வராக நதி, மஞ்சளாறில் ... சிதம்பரம் கோவில் நந்தி முகத்தில் சூரிய ஒளி ஒவ்வொறு அமாவாசையிலும் ஆச்சரியம் சிதம்பரம் கோவில் நந்தி முகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் கோலாகலமாக துவங்கியது வழிபாடு
எழுத்தின் அளவு:
நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் கோலாகலமாக துவங்கியது வழிபாடு

பதிவு செய்த நாள்

26 செப்
2022
07:59

நவராத்திரி முதல் நாள்: பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான நவராத்திரி வழிபாடு. இந்த உலகத்தை தெரிந்து கொள்வது அறிவு. இந்த உலகத்தை தாண்டி, அம்பாளை தெரிந்து கொள்வது ஞானம். அந்த ஞானம் பெற இப்படியான வழிபாடுகள் மிக அவசியம்.அதனால் தான் நம் முன்னோர் பகுத்து பிரித்து வகைப்படுத்தி, இப்படியான வழிபாடுகளை நமக்கு அளித்துள்ளனர்.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பிலிருந்து தப்பவே, நவராத்திரி விழாவாய் கொண்டாடப்படுகிறது. புரட்டாசியின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து, ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியை தான், வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடுகிறோம். வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கை. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்; ஏனெனில், அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும். சக்தியை மனதார பிரார்த்தித்து கடைபிடிக்கும் விரதங்களில் முக்கியமானது, நவராத்திரி விரதம். விரதம் இருப்பது நம் சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சக்தியைப் போற்றவும், ஒரு மகத்தான விஷயமாகவும் கருதப்படுகிறது. விரதம் கைக்கொள்வோர், அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, எட்டு நாட்களும் பகல் உணவின்றி, இரவு பூஜை முடித்து, பின் பால், பழம் உண்பது நல்லது. ஒன்பதாம் நாள் மகாநவமி அன்று பட்டினியாய் இருந்து, மறுநாள் விஜயதசமியன்று, காலை 9:00 மணிக்கு முன் தீபாராதனை செய்ய வேண்டும். இப்படியாக இந்த விரதத்தை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து செய்தல் வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் எட்டு நாட்களும் சிறப்பு ஸ்தோத்திரப் பாடல்களை மனதுருகி பாட, அம்பாள் அருள் புரிவாள் என்பது ஐதீகம். முதல் நாள் தேவி மகாத்மியம் துவங்கி அபிராமி அந்தாதி, துர்க்கா அஷ்டகம், லட்சுமியின், கனகதாரா தோத்திரம், சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி, மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என முடிக்க, அம்பாள் மனம் குளிர்வாள். தொடர்ந்து 9 நாட்களும் ஈசனும், சக்தியும் ஒன்றாய் ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை கண்டால் பலன் கிடைக்கும்.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். துர்க்கையின் வழிபாடு (மகேசுவரி, கவுமாரி, வராகி) இறைவன் இந்த லோகத்தை வாழ்விக்க விரும்புகிறான்; நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தை சக்தி தருகிறாள். நடுவில் இருக்கும் மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். லட்சுமி வழிபாடு (மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி) இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகிறான்; வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். நவராத்திரியின் இறுதி மூன்று நாட்கள், ஞான சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். சரஸ்வதி வழிபாடு (சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி) இதில் இறைவன் முன் அறிந்தவாறு, அருள் வழங்குகின்றான். நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலானது சண்டி ஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே, இந்த ஹோமத்தின் சிறப்பு.ஆலயங்களிலும், இல்லங்களிலும் உருவம், கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களும் வழிபடுபவர்கள், நவராத்திரிக்கு வேண்டிய பூஜைக்குத் தேவையான பொருட்களை, அமாவாசையன்றே சேகரித்து, அன்று ஒரு வேளை உணவு உண்டு, பிரதமையில் பூஜை துவங்க வேண்டும்.

அதாவது பிரதமைத் திதியில் துவங்கி நவமி வரை பூஜை செய்தல் வேண்டும். பூஜையை ஆரம்பிக்கும் போது, ஸ்யவன மகரிஷியையும், சுகன்யா தேவியையும் தியானித்தபடியே துவங்குவது சிறப்பு. நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம...என்பதை 108முறை சொன்னால்கூட போதுமானது! ஆக, மொத்தம் இந்த 9 நாட்களின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நாம் தெரிந்து கொள்வது, நமக்கு சிறப்பு பலன்களை தரும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் துதித்து வழிபடுவோருக்கு, தேவியானவள் சகல சவுபாக்கியங்களையும் தருவாள் என்பது மட்டுமல்லாமல், நாம் முக்தியடையவும் அருள் புரிவாள். சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து, அரசியலிலும், வேலையிலும் பதவி வேண்டும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த ஒன்பது நாட்களும் விரதமிருந்து, நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

சிவனை வழிபட ஒரு ராத்திரி;

அது சிவராத்திரி...! இச்சா, கிரியா, ஞானமென மூன்று வடிவ சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள். அவை நவராத்திரி! இனிபண்டிகைகள் தொடர்ந்து வரப்போகிறது. திருவிழா, கொண்டாட்டம், விழாக்கள் என, களைக்கட்டப் போகிறது என்பதற்கு முன் அச்சாரம், நம் நாட்டில் மிக பிரமாண்டமாய் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகைகள் தான்!
நவராத்திரி ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு பண்டிகை!

சைத்ரா (மார்ச், -ஏப்ரல்) மற்றும் சாரதா (அக்டோபர், - நவம்பர்) மாதங்களில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகள் என்று பொருள். இந்த ஒன்பது நாட்களுக்கு, ஒன்பது நவராத்திரி நிறங்கள் குறிக்கப்படுகின்றன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் - ஆரஞ்சுவெப்பம், நெருப்பு மற்றும் ஆற்றலுடன் செயல்படும் ஆரஞ்சு நிறம், முதல் நாள் கொண்டாட்டத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. ஷைல் புத்ரி தேவியை ஆரஞ்சு நிற உடை, மலர்களால் அலங்கரித்து, நாமும் அதே நிற உடை

அணிந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.


2ம் நாள் - வெள்ளை

பிரம்மச்சாரிணி தேவியை வெள்ளை மலர்களான மல்லி, முல்லை, தாமரை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இவை அன்பையும், விசுவாசத்தையும் குறிக்கும். வலது கையில் ஜெப மாலை மற்றும் இடது கையில் தண்ணீர் பானையுடன் சித்தரிக்கப்பட்ட இந்த தெய்வத்தை இன்று வழிபடுவது சிறப்பு.


3ம் நாள் - சிவப்பு
சிவப்பு காளி தேவியின் நிறம். இது வலிமை மற்றும் கடுமையான தன்மையைக் குறிக்கிறது. இந்த நாளில் சந்திரகாண்டா தேவி கொண்டாடப்படுகிறார், சிவப்பு நிறப் பூக்களால் வீட்டை அலங்கரிப்பது முதல் சிவப்பு நிறப்பழங்களை பிரசாதமாக வழங்குவது வரை, இந்த நாளில் நீங்கள் சிவப்பு நிறத்தின் சக்தியைக் கொண்டாடலாம்.

4ம் நாள் - ராயல் ப்ளூ

அஷ்டபுஜா தேவி என்றும் அழைக்கப்படும் குஷ்மாண்டா தேவிக்கு எட்டு கைகள் இருப்பதால், இந்த வண்ணம் கொண்டாடப்படுகிறது. செல்வம் மற்றும் மன, உடல் வலிமையை மேம்படுத்துவதாய் நம்பப்படுகிறது.


5ம் நாள் -- மஞ்சள்

இது முருகனின் தாயான ஸ்கந்த மாதா தேவியின் நிறம். இந்த நாளில் மஞ்சளை தாராளமாகப் பயன்படுத்துங்கள். உங்கள் பிரார்த்தனைகளைச் செய்யும் போது, மஞ்சளை அதிகமாய் பயன்படுத்துவது சிறப்பைக் கொடுக்கும்.


6ம் நாள் - பச்சை

மகிஷாசுரன் என்ற அரக்கனை வென்ற காத்யாயனி தெய்வம். நவராத்திரியின் 6ம் நாளில் இந்த அம்மனிடம் ஆசி பெற, அனைவரும் பச்சை நிற ஆடைகளை அணிவதை காணலாம். இந்த நிறமும், இந்த அம்மனின் ஆசியும் வாழ்வில் புதிய துவக்கத்தைக் கொடுக்கும்.


7ம் நாள் - சாம்பல்

நிதானமான, நேர்த்தியான சாம்பல் நிற உடைகளை இன்று அணியுங்கள். காளராத்திரி தெய்வத்தின் நன்மையைக் கொண்டாட, சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. அவள் பார்வதி தேவியின் ஏழாவது வடிவம் மற்றும் உலகில் உள்ள எல்லா தீமைகளையும் அழிப்பவளாக கருதப்படுகிறாள். காளியும், காளராத்திரியும் ஒன்றே என்று சொல்பவர்களும் உண்டு.


8ம் நாள் -- ஊதா

மகாகவுரி தேவியைக் கொண்டாடும் நவராத்திரி வண்ணங்களில் ஊதாவும் ஒன்று. மகாகவுரி தேவி துர்காவின் எட்டாவது அவதாரம், மேலும், வாழ்க்கையில் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட, மக்கள் அவளை வணங்குகின்றனர். ஊதா நிறம் அமைதி மற்றும் புத்திசாலித்தனத்தின் நிறமாகவும்இருக்கிறது. எனவே, இந்த நாளில் உங்கள் அழகிய, எளிய ஆடைகளை ஊதா நிறத்தில் அணியுங்கள்.


9 நாள் - மயில் பச்சை

சித்திதாத்ரி தேவி இந்த நாளில் நம்மால் கொண்டாடப்படும் தெய்வம். சித்தி என்றால் அமானுஷ்ய சக்தி என்றும், தாத்ரி என்றால் கொடுப்பவள் என்றும் பொருள். எனவே, அவள்

மனிதர்களுக்கு அ [Bold] மானுஷ்ய சக்திகளை வழங்குகிறாள். அவள் ஆன்மீக சக்திகளால் மக்களை ஆசீர்வதிக்கிறாள். மயில் பச்சை என்பது, நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அலங்கரிக்க மிகவும் அழகான நிறம்!


ஒன்பது படிகளில் கொலு வைக்கும் முறை

முதல் படி: ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல்,செடி,கொடி போன்ற தாவர
பொம்மைகள் இருத்தல் வேண்டும்

இரண்டாம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல்
வேண்டும்
மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்
நான்காவது படி: நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள் இடம் பெற வேண்டும்

ஆறாவது படி : ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற
வேண்டும்
ஏழாவது படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
எட்டாவது படி: தேவர்களின் உருவங்கள் இடம் பெற வேண்டும்; நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள் என்பன வைக்கலாம்
ஒன்பதாவது படி:பிரம்மா,விஷ்ணு,சிவன் என்னும் மும்மூர்த்திகள், அவர் தம் தேவியர்களான சரஸ்வதி,லட்சுமி,பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

பூஜையின் போது பாட வேண்டிய பாடல்...

மால் அயன் தேட,மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக்கையையும் கொண்டு - கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது, வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
மூலமந்திரம்:
ஓம் ஹரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம

காயத்ரி - ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்

முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகள்

அம்பாள்: சாமுண்டிஉருவம்: தெத்துப் பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து, மாலையாகக் கொண்டவள்.குணம்: நீதியை காக்க குரூர குணத்துடன் இருப்பாள்.சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம்

கன்னி கோலம்: பச்சரிசி மாவால் புள்ளிக் கோலம் போடவேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போடக்கூடாது; எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
அரிசி மாவு கோலம் போட்டால், குடும்பஒற்றுமையும், செல்வமும் பெருகும்.நைவேத்தியம்: காலையில் வெண்பொங்கல்,மாலையில் காராமணி சுண்டல் பூஜை நேரம்: காலை 10:30 முதல் நண்பகல்12:00 வரை, மாலை 6:00 - 7:30 வரைமலர்கள்: தாமரை, மல்லிகை, வில்வம்பழம்:
பூஜைக்கு வந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய பழம் வாழைப்பழம்.
தாம்பூலங்கள் : 7 வகையான மங்கல பொருட்கள். தான தர்மங்கள் தான்,நவராத்திரி
பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன.அம்பிகை சங்கீதப் பிரியை! எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் ஒரு பாடலையாவது பாட வேண்டும்.இன்று பாடவேண்டிய பாடலின் ராகம்: காம்போதி.

பெருக்கும். இன்று பூஜை செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், 8ம்எண்ணில் பிறந்தவர்கள், சனி அல்லது ராகு திசை நடப்பவர்கள், லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்.

முதல் நாள் அலங்காரம்: இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும்;மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி இன்று ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்கு சொந்த உறவில்லாத அயல் வீட்டுக் குழந்தைகளை தான் உபசரிக்க வேண்டும். அன்னை ராஜ ராஜேஸ்வரி இந்த உலகிலுள்ள அனைத்துக்கும் அதிபதியாக இருந்து, அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில், இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

என்னவெல்லாம் செய்யலாம் இந்த நாட்களில்...

*நம்மையும், நம் இல்லத்தையும், பூஜை அறையையும், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள, இந்த ஒன்பது நாட்களை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
=நம்மால் முடிந்த அளவு உணவாக, ஆடையாக, பொருட்களாக, தானம் செய்யலாம்.
எப்போதுமே செய்ய லாம் என்றாலும், இந்த ஒன்பது நாட்களில் செய்வது நேரிடையாக காளி, துர்க்கைக்கு செய்வதாய் ஐதீகம்.
*உணவு உண்ணாமல், தெய்வ சிந்தனையோடு இருக்க பழகுங்கள். உடலை சுத்தப்படுத்தி,
புத்துணர்ச்சி பெற இந்த விரதம் உதவும்.
*நம் வீட்டில் செய்வதற்கு உண்டான விசேஷ காரியங்களை செய்யுங்கள். திருமணத்திற்கு நாள் குறிப்பது, குழந்தைக்கு பெயர் சூட்டுவது, புதுமணை போவது, சொத்து வாங்குவது, புது தொழில் துவங்குவது என, மங்களகரமான செயலை செய்யுங்கள்.
*ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு பெண் தெய்வத்தை நினைத்து அலங்காரம் செய்வதால்,
அவர்கள் மனம் குளிர்ந்து நாம் வேண்டுவதை நிறைவேற்றுவர் என்பது நம்பிக்கை.
அதற்காகவே, வீட்டிலுள்ள குட்டிப்பிள்ளைகளுக்கு அந்தந்த நிறங்களில் அலங்கரித்து

அம்மனாக, காளியாக அமர வைத்து வணங்குவதும், கூடுதல் கொண்டாட்டத்தைக் கொடுக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீப வைபவம் இன்று தொடங்கி 3 நாட்கள் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 1008 ... மேலும்
 
temple news
மானாமதுரை, மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட முற்கால பாண்டியர் கால சிற்பங்களை வரலாற்று ... மேலும்
 
temple news
இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அரண்மனைக்கு சொந்தமான இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar