Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு ... நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் கோலாகலமாக துவங்கியது வழிபாடு நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய‌ அமாவாசை வராக நதி, மஞ்சளாறில் பக்தர்கள் நீராடினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய‌ அமாவாசை வராக நதி, மஞ்சளாறில் பக்தர்கள் நீராடினர்

பதிவு செய்த நாள்

25 செப்
2022
05:09

பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி, தேவதானப்பட்டி மஞ்சளாற்றில் மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களை நினைத்து ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. கோயில் அருகே செல்லும் வராகநதி இரு கரையோரங்களிலும் ஆண், பெண் மருத மரங்கள் உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல் இந்த இரு மரங்களும் நடுவே குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு அமாவாசை காலங்களிலும் பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டங்களில் பல பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வராகநதியில் முன்னோர்களை நினைத்து வணங்கி குளித்துவிட்டு கரையோரம் ஐஸ்வர்ய விநாயகரை வணங்கி பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வர். நேற்று மாகாளய அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவதானப்பட்டி மஞ்சளாற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு மூங்கிலணை காமாட்சியம்மனை தரிசனம் செய்தனர்.‌‌ குலதெய்வம் வழிபாடு: வீச்சு கருப்பணசுவாமி, சங்கிலி கருப்பண்ணசாமி, ‌ சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், மண்டு கருப்பணசாமி உட்பட ஏராளமான கோயில்களில் குலதெய்வம் வழிபாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar