சாணார்பட்டி அருகே பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2022 02:09
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் மகாளய அமாவாசையான நேற்று உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் மகாளய அமாவாசை பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாக பூஜை நடந்தது. கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.யாக குண்டத்தில் வேத மந்திரம் முழங்க பக்தர்கள் கொண்டு வந்து பல மூட்டை மிளகாய் வத்தல், மஞ்சள், எலுமிச்சை பழங்களையும் கொட்டி யாகம் நடைபெற்றது. மாலையில் மடத்தில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் உணவு வழங்கி கோ பூஜை நடத்தப்பட்டது. சுற்றுப்பகுதி,வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.