Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ரேணுகாவின் தவம் திருநங்கை திருவிழா காண்போமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சப்தவிடங்க தலங்கள்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
15:02

வலன் என்ற அசுரனிடம் இருந்து இந்திரனை, முசுகுந்த சக்கரவர்த்தி காப்பாற்றினார். அதற்குப் பரிசாக ஒரே வடிவுடைய 7 தியாகராஜர் சிலைகளை பெற்றார். அவற்றை அவர் ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோயில்களை, சப்தவிடங்கத் தலங்கள் என்பர். இத்தலங்களில், தியாகராஜப் பெருமான் நாட்டியக் கலைஞராக அம்பிகையை மகிழ்விக்கிறார். விடங்கம் என்றால் மிகச்சிறிய சிவலிங்கம். இதை ஒரு சம்புடத்தில் இட்டு வைத்திருப்பார்கள். இந்த லிங்கங்கள் பூஜை நேரத்தில் மட்டும் வெளியே எடுக்கப்படும். திருவாரூரில் மூச்சுக்காற்று உள்ளும் புறமும் சென்று வருவது போல ஆடும் அஜபாநடனம், நாகப்பட்டினத்தில் கடல் ஆர்ப்பரித்து எழுவது போல மேலும் கீழும் ஆடும் தரங்க நடனம், திருக்காராயிலில் கோழியைப் போல ஆடும் குக்குட நடனம், திருநள்ளாறில் பித்துப் பிடித்தவனைப் போல ஆடும் உன்மத்த நடனம், திருக்கோளிலியில் தேனை உண்ட வண்டு போல ஆடும் பிருங்க நடனம், திருவாய்மூரில் நீர்ப் பரப்பில் அசைந்தாடும் தாமரை மலர் போல ஆடும் கமல நடனம், வேதாரண்யத்தில் ஒயிலாக நடந்து வரும் அன்னப்பறவை போல ஆடும் ஹம்ஸ நடனம் ஆகியவை பக்தர்களைப் பரவசப்படுத்தும். இத்தலங்களைத் தரிசிப்பவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்குவர் என்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அரசமரத்து விநாயகரை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் (காலை 10.30 -12.00 மணி) வழிபடுங்கள். அங்குள்ள நாகர் சிலைக்கு ... மேலும்
 
திருவிளக்கு பூஜை செய்யும் கன்னியருக்கு விரும்பிய மணவாழ்வும், சுமங்கலிகளுக்கு தீர்க்க சுமங்கலி  ... மேலும்
 
குருவிடம் உபதேசம் பெறாமல் எந்த மந்திரத்தையும் ஜபிப்பதுகூடாது. லோக குருவான தட்சிணா மூர்த்தியை ... மேலும்
 
பிரம்ம முகூர்த்தமான காலை 4.30- 6.00 மணிக்குள் விளக்கேற்றி வழிபாடு செய்வது, தியானத்தில் இருப்பது இரண்டுமே ... மேலும்
 
சிவன் என்றால் மங்கலம் தருபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.