பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2022 05:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கியது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா நேற்று துவங்கியது. இந்த பிரமோற்சவ விழா வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஸ்ரீ செல்வர் மேனாவில் சுவாமி புறப்பாடும், அங்குரார்பணம் நடந்தது. இன்று காலை 6 மணியளவில் சுவாமி திருப்பல்லாக்கு வீதியுலா நடந்தது. நண்பகல் 12 மணியளவில் விசேஷத் திருமஞ்சனமும், இரவு ஹம்ஸ் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை காலை திருப்பல்லாக்கு, திருமஞ்சனமும், இரவு சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. 28ம் தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
30 ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விஷேச திருமஞ்சனமும். இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. 1ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி மாலை 5 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு புஷ்ப பல்லாக்கிலும், 3ம் தேதி இரவு வேடுபரி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 4ம் தேதி காலை 7:30 மணியளவில் திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராதோற்சவம் நடக்கிறது. 5ம் தேதி பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடும், 6ம் தேதி விடையாற்றி உற்சவம், சாத்துமுறை நடக்கிறது. 7ம் தேதி நிகமாந்த மஹாதேசிகன் திருவீதியுலா புறப்பாடு நடக்கிறது.