மூங்கில்பட்டி பட்டாணி சுவாமி கோவிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 06:09
நத்தம், நத்தம் அருகே மூங்கில்பட்டி வீரன் பட்டாணி சுவாமி கோவிலில் புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மூங்கில்பட்டியில் வீரன் பட்டாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு புரவி எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். திருவிழாவையொட்டி முன்னதாக மூங்கில்பட்டி அம்மன் குளத்தில் பிடிமண் கொடுத்து சாமி சிலை, குதிரை, வேட்டை நாய் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் செய்யப்பட்டு வண்ணம் தீட்டினர். நேற்று சிலைகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிர்வேட்டுகள் மற்றும் மேளதாளம் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக முத்தாலம்மன் கோவில் அருகே உள்ள மந்தைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் தேங்காய் பழம் வைத்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் குதிரை பொட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.