Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில்பட்டி பட்டாணி சுவாமி ... திருமலையில் காளஹஸ்தி முக்தாஸ்தவரம் புத்தகம் வெளியீடு திருமலையில் காளஹஸ்தி முக்தாஸ்தவரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் நால்வர் மலையில் உருவான நவபாஷாண சிலை
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் நால்வர் மலையில் உருவான நவபாஷாண சிலை

பதிவு செய்த நாள்

28 செப்
2022
06:09

திண்டுக்கல்: முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி கோயிலின் பழமையான நவபாஷண சிலை போகர் சித்தரால் செய்யப்பட்டது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர், கன்னிவாடி மெய் கண்ட சித்தர் குகையில் தான் நவபாஷண சிலையை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடையாளமாக சிலை செய்ய போகர் மூலிகைகளை அரைத்த உரல் இன்னும் உள்ளது. சிலையை செய்து முடித்த போகர், செவ்வாயின் ஆதிக்கம் உள்ள பழநி மலையை தேர்வு செய்து பிரதிஷ்டை செய்தார். இச்சிலை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளால் செய்யப்பட்டது. மனிதனை போல் இரவில் சிலையில் இருந்து வியர்வை வெளியேறுவது சிறப்பம்சம்.

சிலை செய்த இடம்: கன்னிவாடி சோமலிங்புரத்தில் நால்வர் மலை (அரிகேச பர்வதம்) அடிவாரத்தில் போகர் சிலை செய்த இடம் உள்ளது. இது எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் லிங்கம் போல தெரியும். கன்னிவாடி - ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு கி.மீ.,ல் அடர்ந்த தென்னை தோப்புக்கு மத்தியில் சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது.பஸ் வசதி கிடையாது. கன்னிவாடியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். இம்மலை அடிவாரத்தில் மெய் கண்ட சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர், வாழையானந்த சித்தர் ஆகியோர் சிவனருள் கிடைக்க, சித்துக்கள் கைகூட தவமிருந்துள்ளனர். அப்போது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக வணங்கி அருள் பெற்ற தலம்தான் இது.

நந்திக்கு மூன்று கால்: இக்கோயிலில் ஓம்கார விநாயகர் முன்புறம் அமைந்துள்ள நந்தியின் வலதுபுறம் ஒரு காலும், இடதுபுறம் மூன்று கால்களும் உள்ளன.0 சோமலிங்க சுவாமி எதிர்புறம் அமைந்துள்ள நந்தியின் இடது புறம் ஒரு காலும், வலது புறம் மூன்று கால்களும் உள்ளது. அது மட்டுமா.. ஓம் வடிவில் இருக்கும் ஓம் கார விநாயகருக்கு கைகள் கிடையாது. இதேபோல் வேறு எந்த கோயில்களிலும் கிடையாது.

14 வயது பாலமுருகன்: கோயிலுக்கு பின்புறம் மெய் கண்ட சித்தர் தவம் செய்த குகை உள்ளது. இக்குகை பார்ப்பதற்கு மூன்றாவது கண் போல இருக்கும். இந்த குகையில் போகரை நினைவு கூறும்விதமாக நவபாஷண சிலை போல் 14 வயது பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். உலகம் நிலையில்லாதது என்பதை உணர்த்த ஆண்டி கோலத்தில் முருகன் காட்சி தருகிறார். குகையின் அருகில் அகஸ்தியர் உருவாக்கிய வேதிகை ஊற்று உள்ளது. இது பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம். மற்ற சித்தர்கள் தவம் புரிந்த குகைகள் இந்த மலையின் வேறுவேறு இடங்களில் உள்ளது.

வாலைப் பெண்: சித்தர்களின் குலதெய்வம் பத்து வயதுடைய பெண் குழந்தை வாலைத்தாய்தான். இக்கோயிலில் பாலா திரிபுரசுந்தரி எனும் பெயரில் வாலைத்தாய்க்கு சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை குழந்தைகள் வழிபட்டால் ஞானம் கிடைக்கும். விசேஷ நாட்களில் குழந்தைகளை கொண்டு கும்மி பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

நான்கு சித்தர்கள்: சிவன் சன்னதி அருகேயுள்ள பாறையில் ஓட்டை உள்ளது. அதன் வழியே சித்தர்கள் வண்டு, தவளை போன்ற உருவங்களில் வெளியே வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்த போகர், கவுரி பூஜை செய்ய தமக்கு அனைத்து லட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டினார். அவருடைய சீடர்களான கொங்கணரும், கரூராரும் பெண்களில் உயர்ந்த ரகமான பத்மினி ரக பெண்ணை தேடிச் சென்றும் கிடைக்கவில்லை. எனவே, அந்த ரக கற்சிலை ஒன்றை உயிரூட்டி கொண்டு சென்றனர். அப்போது போகர் கல் நீ வாடி என்று அழைத்ததால் அது கன்னிவாடி யாக மறுவியதாக கூறப்படுகிறது.

நவபாஷண சிலை: இப்படி கற்சிலையை உயிரூட்டி கொண்டு வந்ததை கற்சிலை என்று அறிந்த போகர், கொங்கணரை தவளையாகவும், கரூராரை சித்த பிரமை பிடித்தவராகவும் மாறும்படி சாபம் கொடுத்தார். அப்போது சித்தர்கள் எல்லோரும் கூடியபோது, கொங்கணரையும், கரூராரையும் காணாத அகஸ்தியர், அவர்கள் எங்கே என்று கேட்க, நடந்த சம்பவங்களை புலிப்பாணி கூறினார். எனவே போகரை கோபித்த அகஸ்தியர், முகப்பெருமானை நவபாஷணத்தில் செய்து முடிக்கும் வரை உன்னுடைய சித்து பலிக்காது என்று கூறி சாபம் கொடுத்தார்.போகரோ, அகஸ்தியரை வணங்கி எனக்கு சித்து பலிக்கவில்லை என்றால், நான் இந்த பணியை எப்படி செய்வேன் என்று வேண்டினார். அதற்கு அகஸ்தியர், ககன குளிகை மாத்திரையை போகரிடம் கொடுத்து, இதை நீ வாயில் போட்டு கொண்டால் ஆகாய மார்க்கமாக பறக்கலாம் என்று கூறினார். ககன குளிகை மாத்திரையை பெற்ற போகர், நவபாஷணத்தில் முருகன் சிலையை செய்து சாப விமோசனம் நீங்கியதாக கூறப்படுகிறது.

நவதானிய அபிஷேகம்:
கோயில் நிர்வாகிகள் கூறியது: இங்கு காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடை திறந்திருக்கும். பரிகார பூஜைகள் கிடையாது. பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். நவ தானியங்களில் அபிேஷகம் தான் சிறப்பு. மூலிகைகள் நிறைந்த காடு. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்.சீனா, ஜெர்மன், மலேசிய பக்தர்கள் வருகின்றனர். வனப்பகுதி என்பதால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வர வேண்டாம். போட்டோ எடுக்க அனுமதியில்லை. கோயிலுக்கு செல்லும் ரோட்டை அரசு சீரமைத்து கொடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar