திருமலையில் காளஹஸ்தி முக்தாஸ்தவரம் புத்தகம் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 07:09
ஸ்ரீ காளஹஸ்தி: இன்று புதன்கிழமை 28.9.2022 ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஸ்ரீ காளஹஸ்தி (ஷேத்ர )சிவன் கோயில் விவரங்களை தெரிவிக்கும் முக்தாஸ்தவரம் என்ற புத்தகத்தை இன்று திருப்பதி அடுத்துள்ள திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் வெளியிட்டார் .இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அறநிலைத்துறை அமைச்சர் ஸ்ரீ கொட்டு. சத்திய நாராயணா மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி திருப்பதி எம்பி குருமூர்த்தி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வை.வி. சுப்பா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.இந்த புத்தகத்தில் ஸ்ரீ காளஹஸ்தி தல வரலாறு, சிறப்பு மற்றும் கோயிலின் மற்ற விவரங்களையும் சாசனங்களையும் அதன் விவரங்களையும் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களின் விவரங்களையும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய சிறப்புகள் குறித்தும் கலைகள் தொடர்பான விவரங்கள் இதில் அடங்கியுள்ளன .இந்த( நூலை) புத்தகத்தை ஆந்திர மாநில அறநிலையத்துறையின் அனுமதியோடு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அவர்கள் மேற்பார்வையில் (அச்சிடப்பட்டு) வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.