பதிவு செய்த நாள்
29
செப்
2022
08:09
சென்னை:திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி மற்றும் இதர பணிகள், பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி நடத்த, அரசு முடிவு செய்தது.உபயதாரர், வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வழியாக, 200 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளன. காத்திருப்பு, ஓய்வு, பொருட்கள் பாதுகாப்பு, பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறைகள், நடைபாதை, மருத்துவ மையம், தீத்தடுப்பு கண்காணிப்பு, அன்னதானக் கூடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.கோவில் நிதியில் இருந்து, 100 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், பஸ் நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, கடல் அரிப்பை தடுக்க சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இப்பணிகளை, தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.