பதிவு செய்த நாள்
30
செப்
2022
06:09
சென்னை:சென்னை அறநிலையத் துறை தலைமையகத்தில், ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் முக்கிய கோவில்களில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. இதில், சமயபுரம் மாரியம்மன், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி, பழநி தண்டாயுதபாணி சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கோவில்களில் நடந்த வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ், கோவில்களில் தங்கும் விடுதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மருத்துவ மையம், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த ஆய்வில், அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.