மடப்புரம் கோயிலில் திரண்ட பக்தர்கள் : அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2022 07:10
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வாரம்தோறும் வெள்ளி கிழமை மதியம் உச்சி கால பூஜை பிரசித்தி வாய்ந்தது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் உச்சி கால பூஜையில் பங்கு பெறுவார்கள், நேற்று மதியம் புரட்டாசி மாத உச்சி கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம்செய்தனர். உச்சி கால பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உச்சி கால பூஜை முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.