ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ராமன், சீதை சிற்பங்கள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2022 07:10
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ராமன், சீதை சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேரில் ஆய்வு செய்தார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா செம்மணங்கூர் கிராமத்தில் கடந்த 8ம் நூற்றாண்டு காலத்திய பூரணி பொற்கலை உடலுறவு அய்யனார் சிற்பங்கள் உள்ளன. அதே போல் உளுந்தூர்பேட்டை நகராட்சி உ.கீரனூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வெளியே 10ம் நூற்றாண்டை சேர்ந்த ராமன், சீதை சிற்பங்கள் உள்ளன. இந்தக் கலைச் சிற்பங்களை விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் நேரில் ஆய்வு செய்து கூறுகையில், இந்த சிலைகள் தமிழக கலை பாணியில் இல்லாமல் கங்கர் அல்லது பிற கலை பாணியாக இருக்கலாம் என தெரிகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து அழகிய தனித்துவம் வாய்ந்த சிற்பங்கள் இன்றும் வழிபாட்டில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.