ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் துணைக்கோயில் ஆன மரகதாம்பிகை சமேத மணிகண்டேஸ்வர சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு இன்று காயத்ரி தேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் குங்கும அர்ச்சனை நடத்தப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டப்பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் அம்மனுக்கு நவராத்திரி விழாவில் ஐந்தாவது நாளையொட்டி 29ம் தேதி மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.