பதிவு செய்த நாள்
01
அக்
2022
05:10
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள ஸ்ரீ முத்தப்பன் கோவிலில், நவராத்திரி விழா இசை கச்சேரி நடந்தது.
நாடுமுழுவதும், நவராத்திரி விழா, கடந்த, 26ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, வடவள்ளியில் உள்ள ஸ்ரீ முத்தப்பன் கோவிலில், நாள்தோறும், மாலை, 6:30 மணிக்கு, இசைக்கச்சேரி நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின், ஐந்தாம் நாளான நேற்று, இளம் இசை கலைஞர் கீர்த்தனா ராமசந்திரனின் வீணை இசைக்கச்சேரி, வடவள்ளியில் உள்ள ஸ்ரீ முத்தப்பன் கோவிலில் நடந்தது. இதில், கீர்த்தனா ராமசந்திரன் வீணையும், மணி மிருதங்கமும் வாசித்தனர். இதில், ஏராளமான இசை ஆர்வலர்கள் பங்கேற்று வீணை மற்றும் மிருதங்கம் இசை கச்சேரியை ரசித்தனர். முன்னதாக, கீர்த்தனா ராமசந்திரனின் வீணை கச்சேரி, கடந்த, 26ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்ள, தன்வந்திரி கோவிலில் அரங்கேறியது. வரும், நாளை (அக்., 2), என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள சின்மயா கிருபாவிலும், வரும், அக்., 4ம் தேதி, புரூக் பீல்ட் மாலிலும், மாலை, 6:30 மணி முதல் 8:00 மணி வரை, கீர்த்தனா ராமசந்திரனின் வீணை இசைக்கச்சேரி நடக்கிறது.