தேவகோட்டை: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நவராத்திரி பூஜையை செய்து கொலு வைத்து விழா நடத்தும் சைவ, வைணவ திருக்கோயில்களில் ஐந்தாம் நாளான நேற்று திருக்கல்யாணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பூஜை யின் மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், கோதண்டராமர் ஸ்வாமி கோவில், கிருஷ்ணன் கோவில், ரங்கநாத பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தில் தரிசனம் செய்தனர்.