மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பரதநாட்டிய மாணவியின் சலங்கைபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ்- தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் சித்ரலேகா தம்பதியினரின் மகள் ரிதன்யா. இவர் மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளியில் 4 ஆண்டுகளாக பரதம் பயின்று வருகிறார். இவரது சலங்கை பூஜை மயிலாடுதுறையில் நடைபெற்றது. நாட்டியப்பள்ளி குரு உமாமகேஸ்வரி வரவேற்றார். இதில், திருவிடைமருதூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அறவாழி, அக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் பொன்னி, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சீத்தாலெட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மாணவிக்கு சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில், புஷ்பாஞ்சலி, மஹாகாளி, கணநாயகாய, சலங்கை கட்டி, காவடிச்சிந்து ஆகிய உருப்படிகளில் மாணவி நாட்டியமாடினார். நிகழ்ச்சியை நல்லாசிரியர் இரா.செல்வகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில், காவல் ஆய்வாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.