அக்.14ல் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் வேல் எடுக்கும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 11:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் வேல் எடுக்கும் திருவிழா அக். 14ல். நடக்கிறது. கொரோனா தடை உத்தரவிற்கு பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இத்திருவிழா நடக்கிறது.
அன்று காலை கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் முடிந்து கிராமத்தினர் சார்பில் பல்லக்கில் வைத்து ரத வீதிகளில் புறப்பாடாகி மலை மேல் கொண்டு செல்லப்படும். அங்குள்ள காசி விசுவநாதர் கோயில் எதிரே உள்ள சுனை தீர்த்தத்தில் வேலுக்கு பல்வகை அபிஷேகங்கள், தீபாராதனை முடிந்து அங்குள்ள சுப்பிரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். கிராமத்தினர் சார்பில் கதம்ப சாதம் பிரசாதம் வழங்கப்படும். மாலையில் வேல் மலையிலிருந்து எடுத்துவரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள மூலவர் பழனி ஆண்டவர் கோயில் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை முடிந்து இரவு தங்கவேல் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்படும். கொரோனா தடை உத்தரவால் இரண்டு ஆண்டுகள் இத்திருவிழா கோயிலுக்குள் உள் திருவிழாவாக நடத்தப்பட்டது.